நான் ஏமாற்றபட்டு விட்டேன்

December 18th, 2011 No comments

நான் ஏமாற்றபட்டு விட்டேன்

காதலியால் அல்ல என் கனவினால்

தோழியாக என்னுடன் இருந்தவள்

காதலால் பிரிந்து சென்றால் அன்று

காலத்தினால் பிரிந்து சென்றால் இன்று

உன் நினைவுகளை நெஞ்சில் சுமந்து

வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு உயிர்

நான் காதலிப்பது ??

December 18th, 2011 No comments
tamil love poems kadhal kavithai

நான் காதலிப்பது ??

 

நான் காதலிப்பது நீ என்று தான்

நினைத்து வாழ்த்து வந்தேன்

பின்புதான் தெரிந்தது நான் காதல் செய்தது

என் இதயத்தில் நீ ஏற்படுத்திய காயத்தை என்று

மருந்து போடுவதற்கோ மனமில்லை – காரணம்

உன்னை மறக்கும் எண்ணம் என் மனதிற்கு இல்லை

அப்பட பல மாதத்திற்கு பிறகு எனது முதல் பதிவு இது பிடித்திருந்தால் கீழே உள்ள பட்டனை அழுத்தி பகிர்த்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்

காதல் கவிதை

September 28th, 2011 4 comments

சிரித்து சிரித்து பேசியதால்
சிந்திக்காமலே காதலிதுவிட்டேன்
என்னுயிர் தோழன் என்றவளே
இன்று இவன் யார் என்றால்
காரணம் காதலா இல்லை
அவளின் கல் இதயமா
என்காதலை புரிந்துகொள்ளாமல்
பிரித்து சென்றவள் நீ
அதை புரிந்துகொள்ளாமல்
திரிந்து கொண்டிருப்பவன் நான்………..

காதலியே வரம் தருவாயோ

September 10th, 2011 No comments
பெண்ணே வரம் ஒன்று வேண்டும்
உன் மௌன மொழிகளை மொழி பெயர்க்க
தெரியாத முட்டாள் காதலன் நான்

உன் இதழ் பேசி கேட்டதை விட
உன் கண்கள் பேசி பார்த்ததே அதிகம்

கண் ஜாடையை நீக்கி என்றுதான்
உன் இதழ்களால் பேசுவாய்

காதலனாக வேண்டாம் நண்பனாக கூட வேண்டாம்
 யாசித்து கேட்பவனிடம் இல்லை என்று சொல்லும்
சொல்லும் அளவுக்காவது வார்த்தை பரிமாற்றம் போதும்
                                       –ப்ரியமுடன் ஜெயமாறன் நிலா ரசிகன் 

விடை சொல்லி செல்

April 18th, 2011 1 comment
விடை சொல்லி செல்

என்னுயிர் தோழியே நான் பார்த்த பார்வையை நீ

வேண்டாம் என ஒதுக்கி இருக்கலாம்

என் தொடர்தலை நீ தவிர்த்திருக்கலாம்

எனது கடிதங்களையும் நீ கிளிதிருக்கலாம்

ஊமையாக இருந்து என் உயிரை

உறிஞ்சுவிட்டாயே என் தோழியே

உன் தாகங்களை தணிக்க

என் இரத்தங்களா தேவை உனக்கு

பெண்ணே என் தோல்விகள்

உனக்கு வெற்றிகளா

என் கண்ணீர் துளிகள்

ஏனோ உனக்கு அமிர்தமாக உள்ளன

நீ என்னை விலகி சென்றது

எனக்கு வருத்தமில்லை

என்னை நேசித்த உன் இதயத்தை

எங்கு ஒலித்து வைத்தாயோ என்பதே

என் வருத்தமாக அமைந்தது

தோழனாக இருப்பதற்கு கூட தகுதி

இல்லாதவனா நான் விடை சொல்லி செல்

நிலவின் மீது காதல் வேண்டுகோள்

March 20th, 2011 3 comments

அழகு வெண்மதியே உன்னை நான் காதல் செய்தேன்

காரணம் சொல் என்றாய் என் காதலுக்கு…….

காரணமோ எனக்கு தெரியவில்ல

பதிலும் சொல்லவும் இயலவில்லை ………….

வெறும் கல்லைகூட கடவுள் என சொல்லும் போது

அதை நம்பி வணக்குகிறாய்

அதுபோல என்காதலை நீ வணங்க வேண்டாம்

காயபடுதாமல் இருந்தால் மட்டும் போதும் என் உயிர் தோழியே

ப்ரியமுடன் மாறன்
(நிலா ரசிகன்)

பிறந்த நாள் கொண்டாட்டம்

December 24th, 2010 17 comments

அன்புள்ள நண்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு என்னோட ப்லோக்க்கு இன்னைக்கு முதலாம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்து சொல்றவங்க சொல்லலாம் இல்ல அட பாவி ஒரு வருஷமா கவிதை என்ற பேருல மொக்கை போட்டு என்னகள சாவடிக்குறயனு திட்டுறவங்க திட்டலாம். அறிமுகம் இல்லாமல் புதிதாக கிடைத்த நண்பர்கள் கவலைகளை கூட காமெடியாக மாற்றக்கூடிய நல்ல நண்பர்களை குடுத்த பதிவுலகத்திற்கு என்றும் என் நன்றிகள் . யாரும் கேக் சாப்பிடாம போககூடாது இந்தாங்க எடுத்துகோங்க.

இதோடு மற்றும் ஒரு செய்தி இனி இந்த வலைதளத்தை நிலா ரசிகன் என மாற்ற உள்ளேன் காரணம் கேட்க்க கூடாது. அப்பறம் ஒரு முக்கியமான விஷயம் சத்தியமா நான் இன்னும் யாரையும் காதலிக்கலா ஏன யாரும் என்ன காதலிக்கலா இத வலைடளைதில் வரும் கவிதைகள் அனைத்தும் சும்மா பொழுது போக்குக்க எழுதுனது மற்றபடி வேற ஒன்னும் இல்ல. எனக்கும் காதல தவிர வேற ஒன்னும் எழுத தெரியல என்பதே உண்மை.

Categories: Uncategorized Tags:

நிலவின் மீது காதல்

December 17th, 2010 9 comments

தினமும் தேய்ந்து தேய்ந்து

மறைவது நிலவின் இயல்பு

நிலா என்பது உன் புனை பெயர்

நிலவின் குணம் மறைவது மட்டுமல்ல

என்றாவது மீண்டும் வளரும்

உன்மனதில் தேய் பிறையான என் நினைவு

என்று தான் வளர் பிறையாக மாறும்

நிலவே உன் மனதில் அமாவாசையான

என் நினைவு பௌர்ணமி நிலவாக என்று வட்டமிடும்

Categories: கவிதை, காதல் Tags:

பிரிவின் வலியை உணர்த்தும் காதல் கவிதை

November 2nd, 2010 16 comments

காதல் மிகவும் இனிமையானது என உணர்ந்தேன்

அவள் மேல் நான் காதல் கொண்ட போது

காதல் மிகவும் கொடியது என அறிந்தேன்

அவள் என் காதலை கொன்ற போது

கடவுள் என்னிடம் ஏதேனும் வரம் கேட்டால்

அவரிடம் நான் கேட்கும் வரம் ஒன்று மட்டுமே

அது அவள் நானாகவும் நான் அவளாகவும்

பிறக்க வேண்டும் அப்பொழுது தான் அவளுக்கு

காதலின் வேதனையும் பிரிவின் சோதனையும் புரியும்

காதலில் ரகசியம்

October 4th, 2010 12 comments

அவள் அழகின் ரகசியம்

என்னிடம் அழகு இல்லாததுதான்
என் அன்பின் ரகசியம்

அதை உணர அவளிடம் இதயம் இல்லாததுதான்

அவள் வெற்றியின் ரகசியம்

அவள் பின்னல் நான்

என் தோல்வியின் ரகசியம்

என் முன்னால் அவள்

.